'பாலைவனத்தில் சிக்கிய பிரபல ஹீரோ.. சீக்கிரமே ரிட்டர்ன்.?! - மகளின் பாசமான வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ப்ரித்விராஜ் ஜார்டனில் இருந்து வருவது குறித்து அவரது மனைவி ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

நடிகர் ப்ரித்விராஜ் மகளின் பாசமான வீடியோ | actor prithviraj daughter lovely video of his return from jordan completing aadu jeevitham shoot

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ப்ரித்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது நடித்து வரும் ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றார். அப்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவினர் அங்கேயே சிக்கி கொண்டனர். 

சுமார் 70 நாட்களுக்கு மேலாக ஜார்டனில் இருக்கும் ப்ரித்விராஜ் சீக்கிரமே வீடு திரும்புவது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரது மனைவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ப்ரித்விராஜின் மகள், My Father is Coming என எழுதும் வீடியோவை பதிவிட்டு, அவரது வருகை குறித்து தெரிவித்திருக்கிறார் அவர் மனைவி. இந்த பதிவுக்கு கமன்ட் செய்துள்ள ப்ரித்விராஜ், ''சீக்கிரமே திரும்பி வந்து, என் இளவரசியுடனும், என் ராணியுடனும் இருக்க ஆசைப்படுகிறேன்'' என பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My father is coming! #Soon#DaadaComingHome#Thaadikaran😀🧿

A post shared by Supriya Menon Prithviraj (@supriyamenonprithviraj) on

மற்ற செய்திகள்

நடிகர் ப்ரித்விராஜ் மகளின் பாசமான வீடியோ | actor prithviraj daughter lovely video of his return from jordan completing aadu jeevitham shoot

People looking for online information on Aadujeevitham, Coronavirus, Jordan, Prithviraj will find this news story useful.