திரைப்படத்துறையில் முன்னணி நடிகரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனுமானவர் இளைய திலகம் பிரபு.
நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்கிறார். நடிகர் பிரபுவின் மனைவியும், சிவாஜி கணேசனின் மருமகளும், விக்ரம் பிரபுவின் தாயாருமானவர் புனிதா பிரபு.
இந்நிலையில் நடிகர் பிரபுவின் மனைவி புனிதா பிரபுவின் மனைவியின் குடும்பத்தின் பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த சோகத்தில் பிரபுவின் குடும்பம் உள்ளது. அவர்களுக்கு திரைத்துறையினரும் உறவினர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகர் பிரபுவின் மனைவி புனிதா பிரபுவின் தாயார் திருமதி.கோபாலகிருஷ்ணன் டிசம்பர் 5-ஆம் தேதி (ஞாயிறு) காலை காலமானார். தஞ்சாவூரில் உள்ள அம்மாப்பேட்டையில் திருமதி.கோபாலகிருஷ்ணன் மரணம் அடைந்ததை அடுத்து, அவரது இறுதிச்சடங்கு அனுசரிக்கப்படுகிறது.