www.garudavega.com

மருத்துவமனையில் நடிகர் பிரபு.. என்னாச்சு? உடல் நிலை குறித்து வெளியான அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபு. சிவாஜி கணேசனுடன் இணைந்து பல திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

Actor Prabhu Admitted In Hospital Health Condition

தன்னுடைய நடிப்பால்  தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இளைய திலகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர்.

பல எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து, பல விதமான கேரக்டர்களை திரைப்படங்களில் பிரதிபலித்து, 80-களில் இருந்து தற்போது வரை முன்னணி ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பிரபு. சமீபத்தில் நடிகர் பிரபு நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பிரபு சென்னை, "கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், நேற்று (20 பிப் 2023) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

Actor Prabhu Admitted In Hospital Health Condition

அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன்  இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய - பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்". என மெட்வே மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prabhu Admitted In Hospital Health Condition

People looking for online information on Prabhu, Prabhu Ganesan, Sivaji Ganesan will find this news story useful.