நடிகர் பொன்னம்பலம் தனது உடல்நிலை குறித்து உருக்கமாக நம்மிடம் பேசினார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் தனது வில்லத்தனத்தால் கலக்கினார் இவர். இதனிடையே அண்மையில் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த பொன்னம்பலம் நம்மிடம் தனது உடல்நிலை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, '' நான் நிறைய படங்களில் நடித்தேன், நன்றாக சம்பாதித்தேன், ஆனால், எனக்கென்று எதையும் சேர்த்து வைத்து கொண்டதில்லை. இப்போது எனக்கு கிட்னி பிரச்சனை வந்திருக்கிறது. இந்த தருணத்தில் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் விற்றுதான் எனது மருத்துவ செலவுகளை பார்த்து வந்தேன். இந்த நிலையில்தான் சரத்குமார் அவர்களிடம் உதவி கேட்டேன். அவரும் உடனே பணம் கொடுத்து உதவினார். அதே போல நடிகர் கமல் எனது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக கூறியுள்ளார்'' என தெரிவித்தார்.
மேலும் என்னுடன் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவ முன்வர வேண்டும். நடிகர் ரஜினி, சரத்குமார், விஜய், விக்ரம், லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். பணம் இன்றி மருத்துவ செலவுகளுக்காக நான் போராடியது மிகவும் கொடுமையானது. 20-க்கும் மேற்பட்ட முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. இவ்வளவு நடந்தும் ஸ்டன்ட் யூனியனில் இருந்து யாரும் என்னை பார்க்க கூட வரவில்லை. அது மிகுந்த வருத்தமாக இருக்கிறது'' என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பொன்னம்பலம் பேசிய முழு வீடியோ இதோ..,