நடிகரும், முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த 30-ஆம் தேதி விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தான் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் உடன் பார்த்ததாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
Am doing well. Watching 'Satriyan' movie, with Sisters who taking care of me.
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த
'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம். pic.twitter.com/QekthdQNz2
— Vijayakant (@iVijayakant) September 5, 2021
மேலும் அதனுடன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்