நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்து இயக்குநர் சச்சி குறித்து பதிவிட்டுள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். ப்ரித்விராஜ், பிஜு மேனன் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தை இயக்கிய எழுத்தாளர் சச்சி, திடீரென காலமாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து திரையுலகை சேர்ந்த பலர், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன், சச்சியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதோடு, ஒரு தகவலையும் பகிர்ந்துள்ளார். பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த சச்சி, தமிழில் ரீமேக் ஆகும் இத்திரைப்படத்தில் நடிக்க, கோஷி கதாபாத்திரத்திற்கு கார்த்தியும், அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்திற்கு பார்த்திபனும் சரியாக இருப்பார்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள பார்த்திபன், ''அய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன்.அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம்'' என பதிவிட்டுள்ளார்.
அய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன்.அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம் pic.twitter.com/9eWchtLte4
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 19, 2020