www.garudavega.com

''அஜித்துக்கு வில்லனா நடிக்க மாட்டேன், விஜய் கூட ஏற்பட்ட ஒரு மனவருத்தம்'' - நெப்போலியன் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் தன் முத்திரை பதித்துள்ளவர் நடிகர் நெப்போலியன். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'சீமராஜா'வில் நடித்திருந்த அவர், தற்போது கார்த்தியுடன் 'சுல்தான்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் 'டிராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது திரையுலக அனுபங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், இப்போ இருக்கும் இளம் நடிகர்களுல் யாருடன் இணைந்து நடிக்க ஆசை என தொகுப்பாளர் நிக்கி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், ''சிவகார்த்திகேயன் கூட சீமராஜா நடிச்சுட்டேன். விஜய் கூட போக்கிரி பண்ணேன். அஜித் கூட மட்டும் நடிக்கல. ஆனா வில்லனா நடிக்க மாட்டேன் என்றார். ஹீரோவுக்கு சப்போர்டிங் ரோலா இருந்துச்சுனா அஜித் கூட நடிக்க வேண்டும் என்று ஆசை'' என்றார்.

அப்போது தளபதி விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், விஜய் படங்கள் அதிகமாக பார்க்கிறது இல்ல. அவருக்கும் எனக்கும் ஒரு சின்ன மன வருத்தம். அது அந்த படத்துல ஏற்பட்டது. மத்த படி அந்த படத்துல நல்லா பண்ணிருப்பாரு. பிரபு தேவாவும் அவரும் சமமா டான்ஸ் ஆடிருப்பாங்க'' என்றார்.

''அஜித்துக்கு வில்லனா நடிக்க மாட்டேன், விஜய் கூட ஏற்பட்ட ஒரு மனவருத்தம்'' - நெப்போலியன் அதிரடி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Nepoleon speaks about Rajinikanth, Kamal Haasan, Ajith, Vijay | ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குறித்து நடிகர் நெப்போலியன் ப

People looking for online information on Ajith Kumar, Nepoleon, Sivakarthikeyan, Vijay will find this news story useful.