மறைந்த நடிகர் ரிஷி கபூர் உடனான சந்திப்பு குறித்து நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நட்டி என்கிற நட்ராஜ். இவர் நடித்த சதுரங்க வேட்டை திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் இவர் ஹிந்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜப் வீ மெட், லவ் ஆஜ் கல் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மறைந்த ஹிந்தி சினிமாவின் மூத்த நடிகர் ரிஷி கபூர் உடனான சந்திப்பு குறித்து அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ''லவ் ஆஜ் கல் படத்தில் நான் வேலை செய்த போது, ரிஷி கபூர் சார் ஒரு பார்ட்டி கொடுத்தார். அப்போது அவரது மனைவி என்னிடம் தமிழில் பேசியதை பார்த்து நான் ஆச்சர்யமடைந்தேன். அப்போது ரிஷி கபூர், ஹிந்தி மட்டும் பேசும் ரீஜினலாக இருக்க கூடாது எனவும், மெட்ராஸை பற்றி பெருமையாகவும் பேசினார்'' என நட்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவையும், வாகினி ஸ்டூடியோவை தனது இரண்டாவது வீடு போல கருதினார் என நட்ராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
I was working on Love aaj kal,there was a party hosted by RISHI KAPOOR sir. NEETU KAPOOR mam was also there.She spoke to me in tamil.I was amazed by her fluency in tamil. Sir was saying to us saying dont be regional speak in hindi and he was praising MADRAS
— N.Nataraja Subramani (@natty_nataraj) April 30, 2020