www.garudavega.com
iTechUS

"21 வருசத்துக்கு முன்னாடி".. தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தில் இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார்.

Actor Mysskin about Vijay Thalapathy 67 Movie and Lokesh Kanagaraj

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த்.. படம் குறித்து என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க 😍

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Actor Mysskin about Vijay Thalapathy 67 Movie and Lokesh Kanagaraj

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Actor Mysskin about Vijay Thalapathy 67 Movie and Lokesh Kanagaraj

Images are subject to © copyright to their respective owners.

நேற்று இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில், "21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு.

Actor Mysskin about Vijay Thalapathy 67 Movie and Lokesh Kanagaraj

Images are subject to © copyright to their respective owners.

இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என்மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன்". என மிஷ்கின் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

Also Read | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரில் ஷூட்டிங்? தெறி அப்டேட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Mysskin about Vijay Thalapathy 67 Movie and Lokesh Kanagaraj

People looking for online information on Lokesh Kanagaraj, Mysskin, Thalapathy 67, Vijay will find this news story useful.