மறைந்த நடிகர் மயில்சாமிக்காக அவர் விரும்பி பூஜை செய்த கோவிலிலேயே அவரது புகைப்படம் வைக்கப்பட்டுள்ள சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
பிரபல நடிகர் மயில்சாமி, 57 ஆவது வயதில் மரணம் அடைந்த சூழலில், அவரது உடலுக்கு இறுதி சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிவபக்தனான மயில்சாமி, சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டிருந்தார். கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலில், டிரம்ஸ் சிவமணியுடன் கலந்து கொண்ட மயில்சாமி, அங்கே விடியற்காலை சுமார் மூன்றரை மணி வரை இருந்துள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பிய சூழலில், சுமார் 5:30 மணி அளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது. தொடர்ந்து அவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய சூழலில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர்கள் ரஜினிகாந்த், எம்எஸ் பாஸ்கர், பிரபு உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners
தீவிர செல்வ பக்தனாக இருந்து சிவனை வழிபட்ட கொஞ்ச நேரத்திலேயே உயிரை விட்ட மயில்சாமிக்கு இறுதி அஞ்சலியில் சிவ பூஜைக்கு இசைக்கப்படும் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு இருந்தது. அதே போல திருவண்ணாமலை கோயிலில் பூஜிக்கப்பட்ட மாலை ஒன்றும் மயில்சாமி உடல் மீது வைக்கப்பட்டிருந்தது. கடைசி நிமிடம் வரை சிவ பக்தனாக இருந்த மயில்சாமிக்கு ஒரு சிவனடியாருக்கு கொடுக்கப்படும் சிறப்புகள் கொடுக்கப்பட்டதாக குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மயில்சாமி கடைசியாக சென்று வழிபட்ட கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் சிவன் கோவிலின் கருவறையில் லிங்கத்திற்கு அருகில் மயில்சாமி படம் வைக்கப்பட்டு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. அந்த கோவிலில் மயில்சாமி கடைசியாக பூஜையில் கலந்து கொண்டதால் அதை அங்கே உள்ளவர்கள் மிகவும் கண்ணீர் மல்க குறிப்பிட்டனர். மேலும் தற்போது சிவலிங்கம் அருகே மயில்சாமி போட்டோ வைக்கப்பட்டு பூஜை நடந்த சம்பவமும் பலரை மனம் நெகிழ வைத்துள்ளது.