இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.
”வாழு வாழவிடு" திடீரென பிரபல த்ரோபேக் statement-ஐ பகிர்ந்த அஜித்தின் மேலாளர்!
யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக குறும்படங்கள் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய குறும்படத்தைப் பார்த்து கவர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய அவியல் ஆந்தாலஜியில் அதை இடம்பெறச் செய்தார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படம் சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்தது. திறமையான நடிகர்களை வைத்து கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாமல் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருந்தார். ஒரு நாள் இரவில் மொத்தக் கதையும் நடப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியது.
கைதியும் மாஸ்டரும்
மாநகரம் மூலம் முதல் படத்தில் பவுண்டரி அடித்த லோகேஷ் அவரின் இரண்டாவது படத்தில் சிக்ஸர் அடித்தார்.மாநகரத்தின் வெற்றி லோகேஷுக்கு அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். மாநகரம் போலவே இந்த படத்தையும் சீட் நுனியில் அமரவைக்கும் விதமாக திரைக்கதையை அமைத்திருந்தார் லோகேஷ். கைதி திரைப்படம், விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது கைதி.
கைதியின் ரிலிஸூக்கு முன்பே அவர் விஜய் நடிக்கும் மாஸ்டர் பட வாய்ப்பைப் பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாஸ்டர் படமும் கொரோனா லாக்டவுன் மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தில் விஜய் விஜய்சேதுபதி காம்பினேஷன் காட்சிகளை சிறப்பாக உருவாக்கி ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணங்களை அளித்திருந்தார். இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரானார் லோகேஷ்.
ரசிகரோடு இணைந்த கமல்
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. பல இடங்களில் லோகேஷ் கனகராஜ் தான் ஒரு கமல் ரசிகன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவரே கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் பிறந்தநாள்இந்நிலையில் இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களிலும் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அவர் இயக்கிய மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர் மாஸ்டர் மகேந்திரன் லோகேஷ் கனகராஜுக்கு வித்தியாசமான ஒரு பிறந்தநாள் வாழ்த்தைக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் லோகேஷ் கனகராஜ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, மாஸான கைதி தீம் இசையை இணைத்து அவருக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
மாஸ்டர் மகேந்திரனின் நெகிழ்ச்சி பதிவு
மேலும் அந்த வீடியோவோடு ’என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபரான லோகேஷ்.கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற அருமையான சகோதரரைப் பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நாம் பகிர்ந்து கொண்ட தருணங்கள் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை .எதிர்காலத்திலும் அதுபோல நிறைய தருணங்கள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எனக்கு ஒரு உத்வேகமான நபர். எப்போதும் எனது உண்மையான ஆதரவாளராகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். மக்கள் மீது மிகவும் அன்பாகவும் கனிவாகவும் இருப்பதற்கு நன்றி. அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். ’ எனக் கூறியுள்ளார்.
“Workmode on” … ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்த நடிகர்- அடுத்த படக் கூட்டணியா?