உலகமே கொரோனா பயத்தில் இருக்கிறது . பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். திரைத்துறையினர் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தந்து டிவிட்டர் தளத்தில் "கொரோனா வைரஸை யாரும் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முடியும் வரை தடுக்கவும்" என்று கூறியுள்ளார்.
இதை பார்த்துவிட்டு ட்விட்டரில் ஒருவர் "உங்களுக்கு என்ன கோடி கணக்கில் வெச்சிருப்பீங்க.. ஏழைகள் என்ன பண்ணுவாங்க?" என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த கிருஷ்ணா "என்னை சார்ந்து இருக்கும் டிரைவர், பணியாளர், வாட்ச் மேன் உள்ளிட்டவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்களும் செய்யுங்கள். உங்களை சார்ந்து இருப்பவர்களை பார்த்து கொண்டால் நல்லது" என பதில் அளித்துள்ளார். கிருஷ்னாவின் இந்த பதில் பலரையும் ஈர்த்துள்ளது. வேற்றுமையை கலந்து னைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது என்பதே உண்மை.
Better safe than sorry 🙏🏼 #COVID2019india #coronavirusindia pic.twitter.com/0K4sy8AJbP
— krishna (@Actor_Krishna) March 18, 2020
Sir..... I take care of people who depend on me like my house help, driver and my watchman n all of their families ... if each of u take care of people dependent on u then we are good bro.
U should too.....
Change begins at home https://t.co/2SvZBD9Fgo
— krishna (@Actor_Krishna) March 18, 2020