பிரபல நடிகை பிரியங்கா மோகனுடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் கவின் பதில் அளித்துள்ளார்.
Also Read | "நொடிப்பொழுதில் உயிர் தப்பினேன்.. கடவுளுக்கு நன்றி".. ஷூட்டிங் விபத்து குறித்து விஷால்! VIDEO
‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி நடித்து விக்ரம் குமார் இயக்கிய 'கேங் லீடர்' படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோக்களான ஜெயம் ரவியுடனும் நடிகர் தனுஷூடனும் ஜோடி சேர்ந்துள்ளார். தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தற்போது நடித்து வருகிறார்.

பிரியங்கா மோகன், தற்போது 4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கவின் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் கவின் Fans Festival என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மீம்ங்களை பகிர்ந்து அந்த மீமில் இருந்து கேள்விகள் கவினிடம் கேட்கப்பட்டது. குறிப்பாக "கவினும் பிரியங்கா மோகனும் சேர்ந்து ஏன் ஒரு படம் நடிக்க கூடாது?" என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கவின், "இது அவங்களுக்கு தெரிஞ்சா என்கிட்ட பேசுவதையே நிறுத்திடுவாங்க. இதெல்லாம் கட்டாயம் நம்ம கையில கிடையாதுல. அவங்களுக்கு இருக்கும் கமிட்மென்ட் லெவலுக்கு அவங்க வேற ஒரு லீக்ல போயிட்டு இருக்காங்க.

நம்ம இப்போ தான் நம்ம ஒவ்வொன்னா கரெக்டா பாத்து பாத்து பண்ணிட்டு இருக்கோம். அது நம்ம கையில கிடையாது இல்லையா?. நடக்கனும்னு இருந்தால் பின்னாடி எப்பயாவது நடக்கலாம்." என கவின் பதில் அளித்தார்.
Also Read | LOVE PROPOSALS பத்தி சமந்தா சொன்ன விஷயம்.. நடிகர் கவின் பகிர்ந்த EXCLUSIVE தகவல்!