இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா பெரும் அளவில் தாக்கி வந்த நிலையில் தற்போதுதான் மெல்ல மெல்ல இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.
இதனிடையே கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு விரைவாக ஊரடங்கு, பொதுமுடக்க என பல்வேறு வகையிலும் தடுப்பு பரவல் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் பணியும் இன்னொரு புறம் தீவிரப்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் திரைப்பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன், தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்லி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றனர்.
Took my first dose of vaccine. #CovidVaccine pic.twitter.com/eqLzqWAvol
— Actor Karthi (@Karthi_Offl) June 11, 2021
இந்நிலையில் தற்போது சிவகுமாரின் மகனும்,. சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்தி தடுப்பூ செலுத்திக்கொண்ட புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.