சென்னை அரசு மருத்துவராக பணியாற்றிய வந்த சைமன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் மற்றொரு இடத்தில் காவல்துறையினரின் துணையோடு அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடமால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்களின் செயல் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்செயலுக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''டாக்டர் சைமனின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!'' என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்! pic.twitter.com/BovGYTTzho
— Actor Karthi (@Karthi_Offl) April 20, 2020