இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் கார்த்தி இணையும் புதிய படத்துக்கு ஜப்பான் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Also Read | "நாம கொடுக்குறதுதான் பிளாக் பஸ்டர்" - Ponniyin Selvan பட விழாவில் திரிஷா மாஸ் பேச்சு!
எழுத்தாளரும், இயக்குனருமான ராஜூ முருகன் கடந்த 2014 ஆம் ஆண்டு குக்கூ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், மாளவிகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில், பி கே வர்மா ஒளிப்பதிவில் வெளிவந்த இப்படம் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய இரண்டாவது படம் ஜோக்கர். இது சமூகத்தை கேள்வி கேட்கும் நாயகனின் கதை. தேசிய விருதை வென்ற இந்தப் படம் பெரும்பான்மையான மக்களால் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகர் ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க நாடோடியின் கதையான இதில் மதங்களுக்கு உள்ளாக நடக்கும் அரசியல் குறித்து பதிவு செய்திருந்தார் ராஜூ முருகன். செல்வ குமாரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.
நடிகர் கார்த்தி
இந்நிலையில், இயக்குனர் ராஜூ முருகன் நடிகர் கார்த்தியுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கார்த்திக்கிற்கு 24 வது படமாகும். இப்படத்துக்கு ஜப்பான் என பெயர் வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கிறது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தெரிகிறது.
கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. இவற்றுள் விருமன் ஆகஸ்டு 31 ஆம் தேதியும், சர்தார் தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி, அக்கதையில் வந்தியத் தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக் களங்களை கையாளும் ராஜூமுருகனுடன் நடிகர் கார்த்தி இணைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Also Read | சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் 'பத்து தல' - வெளியானது அடுத்த அப்டேட்!