நடிகர் கமல் மீனவர்களின் பிரச்சனை குறித்து ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் என அழைக்கப்படுபவர் கமல். இவரது பல திரைப்படங்கள் காலங்கள் கடந்து கொண்டாடப்படுகின்றது. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியையும் இவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மீனவர்கள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?'' என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?
— Kamal Haasan (@ikamalhaasan) April 18, 2020