பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார். தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவருடன் தனது மறக்க முடியாத நினைவுகள் பற்றி அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் பொழுது எனது உடன் பிறந்த சகோதரர்கள் எப்படியோ, அப்படியே எனக்கு எஸ்.பி.பியும் உடன்பிறவா சகோதரர். என்னை பற்றி பேசினாலே அவருக்கு கண்கள் கலங்கிவிடும். அவருக்கு நடிப்பதில் சுத்தமாக ஈடுபாடு இல்லை, அவரை தரதரவென இழுத்து வந்தது நான்தான், அவருக்கு உடம்பு மட்டுமல்ல மனதும் மிகவும் பெரியது. எதிரியாலும் அவரை வெறுக்க முடியாது" என்று கண்கலங்கி பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.