சென்னை: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன், முழு உடற் பரிசோதனை மேற்கொண்டு வீடு திரும்பினார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்கா சென்றுவிட்டு அண்மையில் சென்னை திரும்பியவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்பு நவம்பர் 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, கமல் தனது ட்விட்டர் பதிவில், 'அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின்னர் லேசான இருமல் இருந்தது. மருத்துவப் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து பாதுகாப்பாக இருங்கள்' எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி கமல் சிகிச்சை எடுத்து வந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், போனில் கமலிடம் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 4ம் தேதி கோரேனாவில் இருந்து மீண்ட கமல், நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேக்கப் இல்லாத கீர்த்தி சுரேஷ்.. பார்த்து இருக்கீங்களா.. புகைப்படம் உள்ளே
கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாள்களிலேயே விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்பட்டதற்கு அறிக்கையும் வெளியிட்டார் கமல். விக்ரம் படப்பிடிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி என ஓய்வில்லாமல் பணியாற்றி வந்தார்.
சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளதையும் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், கமல்ஹாசனுக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். முழு உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், சோதனை முடிந்த பின் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலை, அவர் 11.30 மணி அளவில் வீடு திரும்பினார்.
'அதிகாலையில் சேவலை எழுப்பி'.. யாருங்க அது.. இந்த ஓட்டம் ஓடுறாங்க.. நீங்களே பாருங்க!