நடிகர் மயில்சாமி குறித்து நடிகர் ஜெயராம் தமது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Also Read | இந்தியில் உருவாகும் சூப்பர் ஹிட் அடித்த 'LOVE TODAY'.. செம்ம அறிவிப்பு! முழு விவரம்
நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். 2000- காலகட்டத்தில் நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் மயில்சாமி திடீரென உயிரிழந்தார். நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மெமிக்ரி கலைஞரான நடிகர் மயில்சாமி குறித்து நடிகர் ஜெயராம் தமது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயராம், "தமிழ் சினிமாவில் யார்ட்ட கேட்டாலும் மயில்சாமி பத்தி கேட்டா நல்ல நண்பன், மனிதன்னு தான் கூறுவாங்க. அவரும் நானும் மேடையில் மெமிக்ரி செய்து சினிமாவுக்கு வந்தவங்க. படப்பிடிப்பிலோ, எதாவது விழாவிலோ, எங்கு சந்திச்சாலும் மெமிக்கிரி பற்றி தான் பேசுவோம். வாரம் ஒருவாட்டியாவது எனக்கு அவர் தொலேபேசியில் கொண்டு பேசுவார். திருவண்ணாமலைக்கு ரொம்ப வருசமா கூப்பிட்டார். இந்த சிவராத்திரிக்கு கூட ஒரு வாரம் முன்பு கூப்பிட்டார். என்னால் வர முடியல. கடந்த 2 மாதமா என்னை தொடர்பு கொண்டு திருவண்ணாமலை கோவிலுக்கு ஒரு குட்டி யானை வேணும்னு கேட்டார். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்வதா சொல்லிருந்தேன். இந்த சிவராத்திரிக்கு அவர் திருவண்ணாமலைக்கே போயிட்டார்.
" என உருக்கமாக பேசினார்.
Also Read | LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! TRENDING