ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் விக்ரம், கார்த்தி, ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் லக்ஷன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பூமி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.
இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரது வாழ்க்கையில் ஸ்பெஷல் மொமன்ட் எது என கேட்டதற்கு, இருவருக்கும் திருமணமாகி, அவர் ஜெயம் ரவியின் கைகளை பிடித்ததே தன் வாழ்க்கையின் ஸ்பெஷல் மொமன்ட் என புகைப்படத்தை பகிர்ந்து தனது திருமண நாளை பதிலாக தெரிவித்துள்ளார் ஆர்த்தி ரவி. மேலும் தனது கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.