ஜி.வி பிரகாஷின் 'பேச்சிலர்' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்க்கும் படம் தான் பேச்சுலர். இப்படம் கடந்த டிச.3ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். படத்தின் டிரைலர் வெளியான பின்பு இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவரையும் அவரது காதலையும் மையமாக கொண்டு வெளியானது பேச்சுலர். வழக்கம் போல் இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்தார்.
அறிமுக கதாநாயகி திவ்யா பாரதியும் முதல் படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வரும் நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தனர். ஜிவி பிரகாஷ் தன் நண்பர்களுடன் வரும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருந்தன. அறிமுக இயக்குனராக இருக்கும் சக்தி செல்வகுமார் தேர்ந்தெடுத்த கதைகளும் வரவேற்கப்பட்டது. இயக்குநர் இமயம் பாரதி ராஜாவிடம் பாராட்டை பெற்றார் இயக்குநர்.
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து - டிவிட்டரில் ரஜினி - தனுஷ் ரசிகர்களின் கருத்துக்கள்.. ஒரு பார்வை
படத்தின் டிரைலர், டீசர் இளைஞர்களுக்கான படமாக தோற்றம் தந்திருக்கலாம். ஆனால் இந்தப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாக இருந்தது. லிவிங் வாழ்க்கையில் இன்றைய இளைஞர்களிடையே ஏற்படும் பிரச்னைகளை கதையின் போக்கில் சொல்லிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை. பேச்சுலர் அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருந்து வெற்றியும் கண்டுள்ளது.
நள்ளிரவில் திடீரென மாறிய சௌந்தர்யா ரஜினிகாந்த் DP.. நெகிழும் ரஜினி ரசிகர்கள்
படம் தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகு டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி 45 நாட்கள் கடந்து வரும் நிலையில், ஜனவரி 21 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கொரோனா காலத்தில் தியேட்டருக்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள் ஓடிடி தளத்தில் காண்பவர்களுக்கு பேச்சுலர் புது அனுபவத்தை தரும்.