நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
நேற்று (04.08.2021) இந்த படத்தின் புதிய அப்டேட்டாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பின்னர் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஸி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து படத்தின் அடுத்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதனை சன்பிக்சர்ஸ் தனது டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் தலைப்பும் இன்று (05.08.2021) வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த படத்திற்கு "திருச்சிற்றம்பலம்" என பெயரிடப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம் என்பது தமிழ் சைவ சமயத்தில் தவிர்க்கமுடியாத சொல். சிவபெருமானுக்கு தேவாரம் ஓதும் பொழுதும், ஓதிய பிறகும் ஓதுவார்கள் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். சிதம்பரம் தில்லை நடராஜரை குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.
#D44 is #Thiruchitrambalam@dhanushkraja @anirudhofficial #MithranJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar pic.twitter.com/wYVpyBx9Tu
— Sun Pictures (@sunpictures) August 5, 2021