சுந்தர் சி- அனுராக் காஷ்யப் படத்தில் இணைந்த பிரபல நடிகர்…. இதுவரை வெளிவராத BTS புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சுந்தர் சி நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Actor chaams shared sundar C anurag kahsyap Movie BTS pic

Also Read | ராஜமௌலியின் பேன் இந்தியா ஹிட் ‘RRR’… பிரபல ஓடிடியில்… எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சுந்தர் சி-ன் One to One …

திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தினை இயக்கியவர் திருஞானம். இதையடுத்து இவர், தற்போது  சுந்தர் சிஐயை வைத்து One 2 One என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், சுந்தர் சிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். நடிகையும், சுந்தர் சியின் மனைவியுமான குஷ்பூ, அனுராக் மற்றும் சுந்தர். சி ஆகுயோருடன்  இருக்கும் புகைப்படம் ஒன்றை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், இந்த பதிவில், அனுராக் மற்றும் சுந்தர் சி இணைந்து நடித்து வருவதை உறுதியும் செய்திருந்தார் குஷ்பூ.

Actor chaams shared sundar C anurag kahsyap Movie BTS pic

அனுராக் காஷ்யப்…

இதனிடையே, இந்த படத்தில் அனுராக் கதாபாத்திரம் என்ன என்பது பற்றி தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. என்கவுண்டர் போலீஸ் கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப் நடித்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல், விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Actor chaams shared sundar C anurag kahsyap Movie BTS pic

அனுராக் காஷ்யப் இந்திய அளவில் முக்கிய இயக்குனராக அறியப்படுபவர். பாலிவுட்டில் நிறைய படங்களை இயக்கியும், தயாரிக்கவும் செய்துள்ள அனுராக் காஷ்யப், தமிழில் ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நயன்தாரா, அதர்வா மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த "இமைக்கா நொடிகள்" படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தமிழ் படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படங்கள்…

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான சாம்ஸ் வெளியிட்டுள்ள பதிவும், படப்பிடிப்புத்தள புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த படத்தில் பாதிரியார் வேடத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ள சாம்ஸ், மேலும் இயக்குனர்கள் சுந்தர் சி யும், அனுராக் காஷ்யப் ஆகியோருடன் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக கவனத்தைப் பெற்றுள்ளன.

Actor chaams shared sundar C anurag kahsyap Movie BTS pic

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

சுந்தர் சி- அனுராக் காஷ்யப் படத்தில் இணைந்த பிரபல நடிகர்…. இதுவரை வெளிவராத BTS புகைப்படங்கள்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor chaams shared sundar C anurag kahsyap Movie BTS pic

People looking for online information on Anurag kahsyap, அனுராக் காஷ்யப், சுந்தர் சி, Chaams, Sundar C, Sundar C new Movie updates will find this news story useful.