இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைதூக்கியுள்ளது. ஆங்காங்கே மக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வரும் சூழலில் அனைவருக்கும் தடுப்பூ செலுத்தப்படும் பணிகள் விரைவுப் படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று தாக்கத்தல் உடனடி நடவடிக்கைகளாக மாஸ்க் அணிதல், கை கழுவுதல், தனிமனித மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க உலகநாடுகள் அப்போது தொடங்கி இப்போது வரை அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாம் அலையில் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் தான் இளைஞர்களை கொரோனா தாக்காது என்கிற கருத்தை பொய்யாக்கும் வகையில் நடந்த சோக சம்பவம் ஒன்றை நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தமது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது...
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...plss🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
— Bala saravanan actor (@Bala_actor) May 6, 2021
அந்த பதிவில் பால சரவண, “அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது...தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்... நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...plss” என குறிப்பிட்டுள்ளார்.