www.garudavega.com

ICU -வில் பிரபல நடிகர் பாலா.. கணவர் உடல்நிலை பற்றி மனைவி கொடுத்த அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பாலா 'வீரம்' படத்தில் தல அஜீத்தின் தம்பியாக நடித்தார். ஏற்கனவே அவர் தமிழில் 'அன்பு' என்கிற படத்தில்  அறிமுகமானார். 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்தில் அவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தார். பின் நடிகர் பாலா மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா. இந்த படத்தின் மூலம் கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபல நாயகனானார் பாலா.

Actor Bala in hospital wife about his health update

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூர்யான்னு நெனச்சு சூரிய தேடி வந்த பாட்டி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம்!!

மருத்துவமனையில் நடிகர் பாலா

அதே போல புலி முருகன், அண்ணாத்த என தமிழ், மலையாள மொழிகளில் எக்கச்சக்க திரைப்படங்களிலும் பாலா நடித்து அசத்தி உள்ளார்.

இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு, எலிசபெத் என்பவரை நடிகர் பாலா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் தனது முதல் மனைவியான் அமிர்தாவை விவாகரத்து செய்திருந்த சூழலில், பின்னர் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதே போல, நடிகர் பாலாவுக்கு அவந்திகா என்ற மகளும் உள்ளார்.

Actor Bala in hospital wife about his health update

Images are subject to © copyright to their respective owners.

திரண்ட பிரபலங்கள்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகர் பாலாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அறிந்த பல பிரபலங்கள் குறிப்பாக இயக்குனர் சிறுத்தை சிவா, அவருடைய கல்லூரி கால நண்பரும் ஒளிப்பதிவாளருமான வெற்றி பழனிச்சாமி, நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகின.

நடிகர் பாலாவின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகி வந்த சூழலில், அவரது மனைவியான எலிசபெத், தனது பேஸ்புக் பக்கத்தில் கணவரின் உடல்நிலை பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Actor Bala in hospital wife about his health update

Images are subject to © copyright to their respective owners.

மனைவியின் வைரல் பதிவு

அவரது பதிவின் படி, பாலா ஐசியூவில் இருந்தாலும் நலமாக இருப்பதாகவும், அனைவரிடமும் தான் நலமாக இருப்பதாக கூறும்படி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, பலம் வாய்ந்த மனிதராக இருக்கும் பாலா, கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் இது போல எமெர்ஜென்சி சூழ்நிலை இருந்த போதும் அதை எல்லாம் கடந்து வந்தார் என குறிப்பிட்டுள்ள மனைவி எலிசபெத், இந்த முறையும் அப்படி பலமாக திரும்பி வருவார் என தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் நடிகர் பாலா நல்ல முறையில் குணமடைந்து வர வேண்டும் என்றும் மனைவி எலிசபெத் பதிவில் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "லவ் டுடே படத்துல வர்ற மாதிரி.. பிளாக்மெயில் நடந்தா"... இதை செய்யணும்.. மேடையை அதிர வைத்த செளமியா அன்புமணி!!

மற்ற செய்திகள்

Actor Bala in hospital wife about his health update

People looking for online information on Bala Actor, Bala health update, Bala in hospital will find this news story useful.