சன் டிவியில் 'அசத்த போவது யாரு' என்ற நிகழ்ச்சி முதல் விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது போவது யாரு நிகழ்ச்சி வரை அனைவரையும் தனது பலக்குரல் காமெடிகளால் சிரிக்க வைத்தவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் மற்றும் நடிகருமான அசார். பலருக்கும் டி.எஸ்.கே – அசார் என்று சொன்னால் இன்னும் சட்டென்று ஞாபகத்துக்கு வரும். ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் அதிக பிரபலம்.
தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அசார் "ஏன்டா தலைக்கு எண்ணெய் வெக்கல" என்று படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் 2019-ம் வருடம் எந்த ஒரு அறிவிப்புமின்றி அவசரமாக திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணத்திற்கு டிடி, பிரியதர்ஷினி, பிரியங்கா, சுட்டி அரவிந்த், ரோபோ சங்கர் மனைவி, திண்டுக்கல் சரவணன் மற்றும் கேபிஒய் டீமில் எல்லோரும் வந்திருந்து சிறப்பித்தனர். பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றாலும் மிகவும் சிம்பிளாக தனது திருமணத்தை செய்து கொண்டார் அசார்.
இந்நிலையில் நடிகர் அசாருக்கு கடந்த வருடம் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜாரா என்று பெயரிட்திருந்தனர். தனது மகளுடன் அவ்வப்போது அவர் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம்மில் மகளின் முதல் பிறந்தநாளை அடுத்து அழகிய புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்பொழுது "எனது செல்ல இளவரசி ஜாரா என் வாழ்க்கையில் ஒரு சூரிய உதயம் போல் வந்தவள்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ரசிகர்கள் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.