Kadaisi Vivasayi Others
www.garudavega.com

ஆர்யா நடிப்பில் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் "CAPTAIN' படம்! செம அப்டேட்டுடன் வெளியான BTS ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'டெடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர்  தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும்,  ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ்பிக்சன்  திரைப்படத்தில் இணைந்துள்ளனர். 

Actor Arya Starring Captain Movie Shooting Wrapped Up

இப்படத்தை  Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன்  இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி,  தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்திருப்பதால்,  நடிகர் ஆர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘கேப்டன்’ படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் மற்றும் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

Actor Arya Starring Captain Movie Shooting Wrapped Up

D இமான் இசையமைக்கிறார், S.யுவா ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R. சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை), மற்றும் V. அருண் ராஜ் (சிஜி) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Actor Arya Starring Captain Movie Shooting Wrapped Up

கேப்டன் திரைப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்குகிறார். Think Studios நிறுவனம்  நடிகர் ஆர்யாவின் The Show People உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

நடிகர் ஆர்யாவின் சமீபத்திய படங்களான சார்பட்டா பரம்பரை மற்றும் டெடி ஆகியவை இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதால், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் ‘கேப்டன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

Actor Arya Starring Captain Movie Shooting Wrapped Up

 

Actor Arya Starring Captain Movie Shooting Wrapped Up

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arya Starring Captain Movie Shooting Wrapped Up

People looking for online information on Aishwarya Lakshmi, Arya, Captain, Simran, Teddy will find this news story useful.