தனது மாமாவான இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்போது 'ஏ.வி 33' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. பின்னர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
காயமுற்றதால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது என்றும் வருத்தப்பட்டுள்ளார்.