நடிகர் அர்ஜுன் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக பிரபலமானார். இதேபோல் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கேசவன், ஜெய்ஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ள அர்ஜூன் தற்போது குணச்சித்திர நடிகராக பல முன்னணி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடித்த மங்காத்தா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அர்ஜூன் தற்போது விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
Also Read | விஜய் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆக இதுதான் காரணமா.? S.A. சந்திரசேகர் சொல்வது என்ன?
இந்த நிலையில்தான் தன்னுடைய மருமகன் முறையில் உள்ள பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் வெளியாகவுள்ள மார்ட்டின் திரைப்படத்திற்கு அர்ஜூன் கதை எழுதியிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அர்ஜுன் கலந்து கொண்டார்.
இதில் நடிகர் அர்ஜூனிடம், தொடர்ச்சியாக பாலிவுட் படங்கள் தோல்வியை தழுவி வருவதாக குறிப்பிட்டு, தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்பட போக்குகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
Images are subject to © copyright to their respective owners.
இதற்கு பதில் அளித்த நடிகர் அர்ஜூன், “என்னை பெர்சனலாக கேட்டீர்களேயானால் தென்னிந்தியா வட இந்தியா என்கிற பிரிவினை, தடுப்புகள் இருக்க வேண்டியதில்லை, இல்லை என நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக பாலிவுட் படங்கள் ஹிட் கொடுத்துக் கொண்டே இருந்தன.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது நம் படங்கள் தொடர் ஹிட் கொடுத்தனவா என தெரியவில்லை. இன்றும் ஷாருக் கான் படங்கள் நன்றாக ஓடுவதை காண முடிகிறது. சில நேரம் சில விஷயங்கள் இப்படி நடக்கலாம். அவை சீராகும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read | பிரபல தென்னிந்திய சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜூன்..? - அவரே சொன்ன மாஸ் தகவல்.