விஜய் டிவி ஒளிபரப்பிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஆரவ். ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனதற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.
இந்நிலையில் சரண் இயக்கத்தில் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவருடன் ராதிகா, நாசர், தேவதர்ஷினி போன்ற பலரும் நடித்திருந்தனர். இதனையடுத்து தற்போது ராஜபீமா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஆரவ் தனது காதலியான நடிகை ராஹியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்திற்கு பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் தனது மனைவியுடன் திருமண புகைப்படங்களை பதிவிட அவர் அந்த புகைப்படங்களுக்கு தலைப்பாக "இமைப் போல் காப்பேன்" என்று மிகவும் ரொமான்டிக்காக தலைப்பிட்டுள்ளார். சினிமா பாணியில் எழுதப்பட்ட இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் லைக் செய்து வருகின்றனர்.