www.garudavega.com

புனித் ராஜ்குமார் வீட்டில் நடிகர் அஜித்? வெளிவந்த வைரல் புகைப்படம்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூர் : புனித் ராஜ்குமார் வீட்டில் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

actor ajith kumar visits puneeth rajkumar house during NKP time

கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு கடந்த ஆண்டு  (29.10.2021) அன்று உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த உடன் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இரங்கல் தெரிவித்தனர். அதில் “ஸ்ரீ புனித் குமார் ஜியின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்தை போக்க வலிமை பெறட்டும்.!” என்று தங்களது அறிக்கையில் தெரிவித்தனர். இந்நிலையில் அஜித், புனித் ராஜ்குமார் வீட்டில் அவருடைய குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 2019 ஆம் ஆண்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் புனித் ராஜ்குமாரின் அண்ணனுடன் நடிகர் அஜித் நிற்கிறார். 

actor ajith kumar visits puneeth rajkumar house during NKP time

திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கிய் புனித் ராஜ்குமார்.  இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், நடிகர் சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் 1985 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது தேசிய விருதை வென்றவர்.4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றவர்.

actor ajith kumar visits puneeth rajkumar house during NKP time

கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான யுவரத்னா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் காணப்பட்டார் புனித், இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார். தற்போது ஜேம்ஸ் என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வந்தார். சேத்தன் குமார் எழுதி இயக்கிய ஜேம்ஸ், கடந்த ஆண்டு அக்டோபரில் புனித் அகால மரணம் அடையும் முன் கடைசியாக நடித்த படம். ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்‌ஷன் காட்சியைத் தவிர அனைத்து முக்கிய பகுதிகளையும் நடிகர் புனித் ராஜ்குமார் நடித்து முடித்திருந்தார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று (26.01.2022) வெளியாகி உள்ளது. ராணுவ வீரராக இந்த படத்தில் புனித் நடிக்கிறார். இந்த படம் புனித்தின் பிறந்தநாளுக்கு மார்ச் 17,2022 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அனு பிரபாகர், ஸ்ரீகாந்த், ஆர். சரத்குமார், திலக் சேகர், மற்றும் முகேஷ் ரிஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

புனித் ராஜ்குமார் வீட்டில் நடிகர் அஜித்? வெளிவந்த வைரல் புகைப்படம்! முழு தகவல் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor ajith kumar visits puneeth rajkumar house during NKP time

People looking for online information on Ajith, Ajith Kumar, James, Nerkonda Paarvai, NKP, Puneeth rajkumar, Valimai will find this news story useful.