போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவ்ட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். இந்நிலையில் வலிமை படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ இன்று மாலை 5:30 மணிக்கு சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் குமார் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஆக்ஷன் பட விரும்பிகளையும் படத்தின் மேக்கிங் வீடியோ பரவசப்படுத்தியுள்ளது. அஜித் அவர்களின் விபத்துக்காட்சி காண்போரை படபடபாக்குவது உறுதி.