பறவை முனியம்மாவின் மறைவு குறித்து இளம் நடிகர் வெளியிட்டுள்ள பதிவு கண் கலங்க செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் அசத்தியவர் பறவை முனியம்மா. குறிப்பாக படங்களில் இவரது நகைச்சுவையான நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. இவர் கடந்த மாட்ச் 29 அன்று காலமானார். இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் அபி சரவணன். இவர் பறவை முனியம்மாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இதனிடையே பறவை முனியம்மாவின் மறைவு குறித்து பேசிய இவர், ''பறவை முனியம்மா அவர்கள் எனக்கொரு பாட்டி போல இருந்தார். அவரின் மறைவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் பிறந்தநாளுக்கு கேசரி சமைத்து கொடுத்தார். சாப்பாடு சமைத்து கொடுக்கிறேன், வா என்று கூட கூறினார். அவர் இயற்கை எய்தியிருப்பது, மிகுந்த துக்கத்தை கொடுத்துள்ளது'' என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அபி சரவணன், டூரிங் டாக்கீஸ், பட்டதாரி, மாயநதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கும் படத்திலும், ஓவியாவுடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.