நடிகர் சித்தார்த் தமது குடும்பத்தினருக்கு பலாத்கார, கொலைமிரட்டல் உள்ளிட்டவை போன் கால்களின் மூலம் தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும் காட்டமாகவும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் தென்னிந்திய நடிகராக இருந்தாலும் நடிகர் சித்தார்த் இந்தியா முழுவதும் பரவலான திரைப் பிரபலமாக அறியப்படுபவர் தான்.
இந்நிலையில் அண்மையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வரின் ஆக்ஸிஜன் விவகாரம் தொடர்பான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் பதிவிட்ட காட்டமான கருத்து பல தரப்பிலும் வைரலானதுடன் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பின.
My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell
Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.
I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021
இந்நிலையில் தமது போன் நம்பரை பிரபல கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமது குடும்பத்தினருக்கும் தனக்கும் பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும், அவர்களின் ஐடிக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஆனாலும் தான் தன் வாயை மூடப் போவதில்லை, முயற்சி பண்ணி பாருங்கள் என்றும் குறிப்பிட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.