விஜய் டிவி மட்டுமல்லாது சின்னத்திரைகளின் முன்னணி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக, பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில், பிக்பாஸ் வீட்டுக்குள் வழக்கமாக நிகழும் பல்வேறு விஷயங்கள் மிக விரைவாக நடந்து வருவதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிவது தொடங்கி பல்வேறு விஷயங்களும் இந்த சீசனில் அடுத்தடுத்த கட்டங்களில் விரைவாக நடப்பதை கமல்ஹாசன் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இந்த சீசனில், அடுத்தடுத்து எலிமினேஷன் நடந்துள்ளன. முதலாவதாக நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாண்டு கொண்டிருந்தனர்.
அப்போது நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷனில் அதிகாரபூர்வமாக நாடியா வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து பல்வேறு டாஸ்குகள் பிக்பாஸ் வீட்டுக்குள நடத்தப்பட்டன. அதன்படி மிகவும் பரபரப்பான டாஸ்க் ஆக, காயின் டாஸ்க் அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா, மிகவும் கவன ஈர்ப்பை செய்தார்.
அடுத்து, இரண்டாவதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டார். காயின் எடுத்துக்கொள்ளச் சொல்லி நண்பர்கள் கூறியும், அதை பயன்படுத்தாமல் அபிஷேக் மக்களுடைய தீர்ப்புக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், தான் செல்வதாக பிக்பாஸ் போட்டியாளர்களிடையே குறிப்பிட்டு வெளியேறினார்.
இதனைக் குறிப்பிட்டு பல ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் தம்முடைய முதல் உணர்ச்சிபூர்வமான இடுகையை உருக்கமாக பகிர்ந்திருக்கிறார்.
அதில் “பிக்பாஸ் ஒரு விளையாட்டு, நான் நிச்சயிக்கப்பட்ட விதிகளின்படியே விளையாடினேன். டாஸ்குகளின் போது சக போட்டியாளர்களின் போட்டி மனப்பான்மையை நான் தூண்ட முடிந்தது, ஏனென்றால் நான் ஒவ்வொரு வீட்டு நண்பர்களுடனும் ஒரு ஈக்வேஷனை உருவாக்கினேன்.
#BiggBossTamil5 pic.twitter.com/LYngOSgA2f
— S Abishek Raaja (@cinemapayyan) October 25, 2021
இந்நிகழ்ச்சியில் என்னையே நான் பணயம் வைத்தேன், ஆனால் உண்மையாக இருந்த திருப்தியுடன் நான் வெளியேறினேன். உண்மையாக இருப்பது எனது அடையாள சான்றாக இருந்தால், எனது நிகழ்ச்சியையும் எனது வாழ்க்கையையும் அப்படித்தான் நான் நடத்துகிறேன்” என்று அபிஷேக் குறிப்பிட்டு இருக்கிறார்.