2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20ல் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சிறந்த படம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவிற்கான தேசிய விருதை வென்றது. இந்த படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும், ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்திருந்தனர். ஒளிப்பதிவாளராக ராம்ஜியும், எடிட்டராக சுதர்சனும் பணிபுரிந்தனர். இந்தப் படத்தை பார்த்திபன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பயோஸ்கோப் பிலிம் பிரேமர்ஸின் கீழ் தயாரித்து இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் இந்தி ரீமேக் படத்தை பார்த்திபனே இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக ராம்ஜியும், எடிட்டராக சுதர்சனும், இசையமைப்பாளராக சத்யாவும் பணிபுரிகின்றனர். இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தை தயாரிக்கிறார். மணிரத்னம் இயக்கிய குரு, யுவா, ராவண் படங்களில் நடித்த அபிஷேக் பச்சன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு (08.12.2021) அன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் பார்த்திபன் டிவிட்டரில் அறிவித்துள்ளார். அதில் ப்டத்தின் படப்பிடிப்பு 50% நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார். அபிஷேக் பச்சனின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.
பெருமையின்றி அலர்ட்டா இருப்பதும், அலட்டாமல் இருப்பதும் அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் >mr.ABISHEK BACHAN!!!
பாதிப்படம் கடந்துவிட்டேன்.எனக்கே
முதல் ஹிந்தி>என்னுடன் ராம்ஜி (cinematography)சத்யா(music) சுதர்சன்(editor) என்று தமிழ் அள்ளிப் போகிறேன்! pic.twitter.com/Szy5OAAU8Q
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 31, 2021