www.garudavega.com

"நீதான்டி அவனுக்கு பில்டப் குடுத்து..".. பெரும் சண்டைக்கு பின் பிரியங்காவை விமர்சித்த அபிஷேக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ரெட் டிவி மற்றும் ப்ளூ டிவி என இரண்டு அணிகளாக ஹவுஸ்மேட்ஸ் பிரிந்து, இன்னும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்களின் உண்மை முகத்தை மக்கள் முன் வெளிக்கொண்டு வரும் வாய்ப்பை பயன்படுத்தும் டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

abishek alleges priyanka for niroop behaviour biggbosstamil5

அதன்படி பிரியங்கா, அபிஷேக் மற்றும் சிபி மூவரும், நிரூப் மற்றும் இமான் பேட்டி எடுத்து அதில், இமானையும், தாமரை மற்றும் வருணை பேட்டி எடுத்து தாமரையையும் தாறுமாறாக கேள்வி கேட்டனர். ஆனால் இதில் இமான் நடக்காததை நடந்ததாக சித்தரிப்பதாக சொல்லி விவாதத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் தாமரையோ தான் சிபியை கொஞ்சுவது குறித்து பிரியங்கா பேசியதை குறிப்பிட்டு சண்டை போட தொடங்கினார்.

abishek alleges priyanka for niroop behaviour biggbosstamil5

அதன் பின்னர் அது பிராங்க் தான் என அபிஷேக், சிபி, பிரியங்கா மூவரும் கூற, தாமரை இன்னும் தாண்டவம் ஆடத் தொடங்கினார். ஒருவழியாக மற்ற ஹவுஸ் மேட்ஸ் அது டாஸ்க் தான் என்பதை புரிந்துகொள்ள தாமரையை வலியுறுத்தினர். எனினும் கடைசிவரை தாமரை சமாதானம் ஆனதாக தெரியவில்லை.

abishek alleges priyanka for niroop behaviour biggbosstamil5

இதனைத் தொடர்ந்து, நிரூப் பிரியங்காவிடம் இதுகுறித்து தற்போது சண்டையிட்டார். தன் விருப்பம் இல்லாமல், டிவி டாஸ்கில் பிரியங்கா கலாய்த்ததாக நிரூப் குற்றம் சாட்ட, அதை மறுத்த பிரியங்கா நிரூப்பின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இதை செய்ய மாட்டோம் என பேசிய விஷயங்களை குறும்படமாக வெளியிடக் கோரி பிக்பாஸிடம் பிரியங்கா கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

abishek alleges priyanka for niroop behaviour biggbosstamil5

இந்நிலையில் பிரியங்காவிடம் தனிமையில் பேசிய அபிஷேக், எல்லாவற்றுக்கும் காரணம் நீதான் என நேரடியாக கூறினார். குறிப்பாக நிரூப்பின் இந்த நிலைக்கு பிரியங்கா தான் காரணம் என்பதை கூறிய அபிஷேக், “நீதான்டி நிரூப்புக்கு பில்டப் கொடுத்து, அவனை அடைகாத்து, பாதுகாத்து ஒரு கூட்டில் பாதுகாப்பாய் வைத்திருக்கிறாய்!” என்று குற்றம் சாட்டுகிறார்.

abishek alleges priyanka for niroop behaviour biggbosstamil5

முன்னதாக பிரியங்காவிடம், “நான் அவ்வளவு தூரம் சொல்லியும் ஏன் கலாய்ச்ச? நான் வேண்டாம் வேண்டாம்னு தானே சொன்னேன்?” என நிரூப் ஆவேசமாக சண்டைபோட வந்தபோதும் குறுக்கே வந்த அபிஷேக், “உனக்கு எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல், என்னிடம் கேள், நான்  கலாய்த்ததாக இருக்கும்போது என்னிடம் பேசு, அவளிடம் ஏன் பேசுற? கேக்குற?” என கேட்டு, அவரை தடுக்க முயற்சித்தார்.

எனினும் இந்த சண்டை நிரூப்புக்கும் பிரியங்காவுக்குமான வழக்கமான சண்டையாகவே மாறியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Abishek alleges priyanka for niroop behaviour biggbosstamil5

People looking for online information on Abhishek, Abishek Raaja, அபிஷேக், நிரூப் பிரியங்கா சண்டை, பிக்பாஸ், விஜய் டிவி, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Niroop priyanka fight, Priyanka, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.