Fakir Others Banner USA

‘பொறாமைப்படுறவங்கள பிடிக்காது..!’ - மீராவின் கண்ணீரை துடைக்க தண்ணீர் கொடுக்கும் அபிராமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் நடந்த, சந்தித்த விஷயங்கள் பற்றியும் அவர்கள் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர்.

Abirami consoles Meera Mitun by giving cup of water - Bigg Boss Video Promo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் 4வது நாளில் நடந்த சம்பவங்களின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் மீரா மிதுன் தனது மனவேதனையை சக போட்டியாளரான பாத்திமா பாபுவிடம் கண்ணீர் மல்க பகிர்ந்துக் கொள்கிறார்.

அவர் பேசுகையில், ‘வாழ்க்கையில் எனக்கு பிடிக்காத விஷயம் என்மேல பொறாமைப்படுறது. அது ரொம்ப கஷ்டமா இருக்கும். அவங்க ஏன் பேசுறங்க, எதுக்கு பேசுறாங்க, என்ன பண்ண ட்ரை பண்றாங்க எல்லாம் எனக்கு புரியும்’, என்று அழும் மீராவின் கண்ணீரை துடைக்கும் விதமாக அபிராமி குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, வாழ்வில் யதார்த்தம் சமாதானம் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற யதார்த்தங்களும், கோபங்களும், வேறுபாடுகளும், அன்பும், அரவணைப்புமாய் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இன்றைய எபிசோட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

‘பொறாமைப்படுறவங்கள பிடிக்காது..!’ - மீராவின் கண்ணீரை துடைக்க தண்ணீர் கொடுக்கும் அபிராமி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Abirami consoles Meera Mitun by giving cup of water - Bigg Boss Video Promo

People looking for online information on Abirami Venkatachalam, Bigg Boss 3, Kamal Haasan, Meera Mitun will find this news story useful.