பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இனிதே நிறைவைடந்தது. இந்த வருட டைட்டிலை முகேன் வென்றார். அதற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகேனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், நீ ஜெய்க்க பிறந்தவன்டா. உன் அன்பு என்றும் அனாதை இல்லை. நீ தனித்துவமானவன். பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஃபாரெவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீசனில் முகேன் - அபிராமியிடையேயான நட்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வனிதாவும் இருவரது நட்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதனால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.