வழக்கம்போல நேற்று கிச்சன் டீமில் பஞ்சாயத்து ஆரம்பித்தது. மீண்டும் ஒரு லெமன் பிரச்சினை. கிச்சனுக்கும், லெமனுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். நிஷா தனியாக எலுமிச்சம்பழம் எடுத்து வைத்தாராம். சம்யுக்தா கேட்டபோது இல்லையென்று சொல்லி விட்டார்கள் போல. இதைக்கேட்ட நிஷா நாங்க நாலு எலுமிச்சை ஏற்கனவே வாங்கி வச்சுட்டோம் என விளக்கம் சொன்னார்.
இந்த பிரச்சினை அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசியில் அனிதாவிடம் வந்தது. சனம் அமைதியாக நிற்க, அனிதா, ஆரியிடம் டென்ஷனை காட்டினார். அவ்வளவு தான் அனிதாவை மனுஷன் தாளித்து எடுத்து விட்டார். கொஞ்சம் சத்தமா பேசுனதுக்கா இப்படி? என அனிதாவே மனசுக்குள் நினைக்கும் அளவுக்கு இந்த பஞ்சாயத்து நீண்டது. கடைசியில் பாலா உள்ளிட்டவர்கள் வந்து அனிதாவுக்கு ஆறுதல் சொல்லினர்.
Suchi inbetween Anitha Aari argument !!!#BiggBossTamil#BiggBoss4Tamil#BiggBossTamil4 pic.twitter.com/nNdW0UhOEX
— Lone_wolf (@Lone_wolf_246) November 13, 2020
இதற்கிடையில் அனிதா-ஆரி சண்டைக்கு நடுவில் சுச்சி எதையோ சொல்ல முன்வந்தார். ஆனால் ஆரி அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவர் மீண்டும், மீண்டும் சொல்ல வந்தும் பெரிதாக ஒன்றும் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அதான் அவங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குறாங்கள்ள ஏன் வேணும்னே போய் குறுக்கே விழுகுறீங்க? என மீம் போட்டு சுச்சியை கிண்டலடித்து வருகின்றனர்.