நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் மாட்டுனியா என டாஸ்க் ஒன்றை கொடுக்க, அனிதா-ஆரி இருவருக்கும் முட்டிக் கொண்டது. என் ஹஸ்பெண்ட் பத்தி பேசாதீங்க என அனிதா கத்த, ஆரியும் விடவில்லை. கடைசியில் சக போட்டியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்து எரிகின்ற தீயில் மேலும் பெட்ரோல் ஊற்றி விட்டனர். இதில் ஆரி-ஷிவானி இருவரும் விளையாடிய போது பாலாஜி குறுக்கிட முயல அவங்களே நல்லா தான் பேசுறாங்க என ஆரி சொன்னார்.
இந்த போட்டி முடிந்து தான் பேசியது தவறு என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஆரி கேமரா முன்னால் தெரிவித்தார். இதையடுத்து ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க இந்தியளவில் ட்விட்டரில் ஆரியின் பெயர் ட்ரெண்ட் ஆனது. மேலும் இருவரில் யார் செய்தது சரி? என பலரும் வாக்கெடுப்பு நடத்த சமூக வலைதளமே கலவர பூமியாகி பற்றி எரிந்தது. இந்த நிலையில் ஆரி செய்ற விஷயங்கள எல்லாரும் குறை சொல்றீங்க.
இத பாருங்க ப்ரோ.
Unseenல ஆரி அண்ணா ஷிவானிய பாராட்டுறத,
ஆஜித்த ரம்யா & பாலா எப்படி விளையாட விட மாட்டேங்குறாங்கனு ஆரி அண்ணா கவலைப்படுறார்.
இப்படி எவ்ளோ விஷயங்கள மறைச்சானுங்களோ !
ஆரி ஹேட்டர்ஸ் திருந்துங்கடா !#AariArjunan #AariArmy #Aari #BiggBossTamil #BiggBossTamil4 https://t.co/G6mg8jcrZo pic.twitter.com/glLwlH9btm
— Ҝ€ŦŦΔVΔŇ (@KettavanTwits) December 22, 2020
ஆனா அவரு ஷிவானியை மனசார பாராட்டி நீங்க நல்லா வெளையாடுனீங்க சொல்லி பாராட்டி இருக்காரு. இதெல்லாம் யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டுது என சொல்லி வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் ஆரிக்கு எதிராக இருக்கும் சூழ்நிலையில் அவர் எப்படி இதை சமாளித்து அமைதியாக விளையாடி வருகிறார் என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது.