நேற்று பால் கேட்ச் டாஸ்க்கின் ஒரு பகுதியாக மீண்டும் நம்பர் டாஸ்க்கை பிக்பாஸ் கொண்டு வந்தார். போட்டியாளர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி இதை முடிவு செய்யலாம் என்றும் பிக்பாஸ் தெரிவிக்க, அவர் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ரியோ, ஆரி இருவருக்கும் இதுதொடர்பாக முட்டிக்கொண்டது. கடைசியில் வீட்டின் தலைவர் பாலாஜி வாக்கெடுப்பு நடத்தினார்.
இந்த வரிசைப்படி ரியோ, ரம்யா பாண்டியன், சோம், பாலாஜி, ஆரி, அனிதா, ஆஜீத், ஷிவானி, கேப்ரியலா என அனைவரும் வரிசையாக நின்றனர். முதல் இடத்தில் நின்ற ரியோவுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதேபோல ரம்யா, சோம்,பாலாவுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆனால் ஆரிக்கு முதல் மூன்று இடங்களுக்குள் நிற்க ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அவர் 5-வது இடத்தில் நிற்கும்படி நேர்ந்தது.
Top 1 - Rio
Top 2 - Aari
Top 3 - Ramya or Bala
Som game ah Sothapitu TOP3 la Nikiran 😤😤👊🏻
Gabi to shivani- Ava individual ah 2 Balls pudichiruka Apo Ava tha nikanum 🤔🤔Apadi nu patha Aari Top1 la irukanum la 🙏🏻💯#BiggBossTamil4 #biggbosstamil #aariarujunan #bala #Balaji
— Vasanth Vst (@VasanthVst) December 23, 2020
இதைப்பார்த்த நெட்டிசன்கள் சோம் மற்றவர்கள் பந்தை பிடித்து அவர்களுக்கும் பாயிண்ட் போக வைத்தார். ஆனால் அவர் மூன்றாவது இடத்தில் நிற்கிறார். நியாயப்படி ஆரிக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்க வேண்டும். மூன்றாவது இடம் பாலா அல்லது ரம்யா இருவரில் ஒருவருக்கு கிடைத்திருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இதேபோல பாலாஜி சிவப்பு பந்தை பிடித்து தன்னுடைய அணி எடுத்த மொத்த பாயிண்ட்ஸ்க்கும் சங்கு ஊதியது குறிப்பிடத்தக்கது.