தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று யாஷ் ந்டித்த KGF-2 படம் ரிலீஸ் ஆகிறது.
இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்கி உள்ளது. இதே நாளில் அமீர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் ஷத்தா படமும் ரிலிசாகிறது. 1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்கிறார். அமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் நடிகர் அம்ர் கான் பெருந்தன்மையுடன் ‘கே.ஜி.எஃப் 2' படத்தின் முக்கிய அங்கமான நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர் ஆகியோரிடம் தான் மன்னிப்பு கேட்டதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார். சமீபத்தில் ஆமிர் கான் அளித்துள்ள பேட்டியில் இதனை அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.
மேலும் "லால் சிங் ஷத்தா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் படத்தின் வெளியீடு டிசம்பரில் இருந்து ஏப்ரலுக்கு மாறியதாகவும், தேதி மாற்றத்தை அறிவிப்பதற்கு முன்பே ‘கே.ஜி.எஃப் 2' படத்தின் குழுவினருக்கு என்னுடைய சூழலை விளக்கி, கடிதம் எழுதியிருந்தேன். ‘கே.ஜி.எஃப் 2' குழுவினரும் என்னுடைய கடிதத்தை ஏற்றுக்கொண்டு படத்தின் வெளியீட்டில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் நான் நெகிழ்ந்து போனேன்." என ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.