"நம்ம FOOT WORK எப்படி? என்னையும் RECOMMEND பண்ணுங்க..'ரவி சாஸ்திரிக்கு ஆமிர்கான் வச்ச கோரிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Aamir Khan asked a question Ravi Shastri about cricket

Also Read | தனுஷ் நடிக்கும் வாத்தி.. படப்பிடிப்பில் இணைந்த பிரபல முன்னணி நடிகை! அசத்தலான வைரல் BTS போட்டோ

ஆமீர் கான்

முன்னணி பாலிவுட் நடிகரான ஆமீர் கான் சமீப காலமாக தான் கிரிக்கெட் விளையாடும் விடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார். பொதுவாக விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவராக அறியப்படும் ஆமீர் கான் லகான், டங்கல் ஆகிய விளையாட்டு சார்ந்த படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஆமீர் கான், தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Aamir Khan asked a question Ravi Shastri about cricket

கோரிக்கை

இந்த வீடியோவில் ஆமீர் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். அதில்,"ரவி உங்களுக்கு என் Foot Work பிடிக்காதது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஒருவேளை நீங்கள் லகானைப் பார்க்காமல் இருக்கலாம். அதை மீண்டும் பாருங்கள். எந்த அணியும் என்னைப் பெற்றிருப்பதை அதிர்ஷ்டமாக கருதும். எனக்கு சரியான பரிந்துரைகளை அளிக்கவும். அது சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் எனது Foot Work சரியாக இருக்கவேண்டும் என விரும்பினீர்கள்., இதைப் பாருங்கள்" எனக் கூறுகிறார்.

Aamir Khan asked a question Ravi Shastri about cricket

மேலும், ஆமீர் கானின் தயாரிப்பு அலுவலகம் இந்த பதிவில்." பாஸ்-க்கு தேவை இருந்தால் 100 சதவீதம் உழைப்பை கொடுப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, கடந்த மாதம் ஆமீர் கான் தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றினை பதிவிட்டு, தனக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில், ஆமீர் கான் கிரிக்கெட் விளையாடியபடி பேசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aamir Khan Productions (@aamirkhanproductions)

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aamir Khan asked a question Ravi Shastri about cricket

People looking for online information on Aamir Khan, Aamir Khan asked a question Ravi Shastri, Cricket, Ravi Shastri will find this news story useful.