www.garudavega.com

விஜய்க்கு குழந்தை பிறந்த சமயம்.. 'பிரியமானவளே ஷூட்டிங்கில்..' - ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். ஐந்து முதல் அறுபது வரை, இவர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே சம்பாதித்துள்ளார். இப்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸூக்கு ரெடியாக இருக்கிறது. 

விஜய் பட க்ளாசிக் தகவல் | aa memorable incident in vijay's priyamanavale shooting

இந்த நிலையில் நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி தெரிந்து கொள்வோமா.?!. அது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வுதான். அப்போது விஜய், சிம்ரனுடன் பிரியமானவளே படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயம். 

விஜய் பட க்ளாசிக் தகவல் | aa memorable incident in vijay's priyamanavale shooting

அப்போது கர்ப்பமாக இருந்த அவர் மனைவி சங்கீதா லண்டனில் இருந்துள்ளார். அந்த சமயம் ஷூட்டிங்கில் சிக்கி கொண்டதால், விஜய்யால் லண்டனுக்கும் செல்ல முடியாத நிலை. இப்படி இருக்க, விஜய் முதன் முதலில் குழந்தையை பார்த்தது அப்போது ஈ-மெயிலில் வந்த போட்டோக்களில்தானாம். 

விஜய் பட க்ளாசிக் தகவல் | aa memorable incident in vijay's priyamanavale shooting

அதே நேரத்தில், இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அது, பிரியமானவளே படத்திலும், அப்போது விஜய் - சிம்ரனுக்கு குழந்தை பிறக்க போவது தெரிந்து, குடும்பமே சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் தனக்கு குழந்தை பிறந்த செய்த கேட்ட தளபதி ஷூட்டிங்கில் செம குஷியாகிவிட்டாராம். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பட க்ளாசிக் தகவல் | aa memorable incident in vijay's priyamanavale shooting

People looking for online information on Jason Sanjay, Master, Sangeetha Vijay, Vijay, Vijay Wife will find this news story useful.