இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது இந்த இக்கட்டான நிலையில் மக்கள் பணி செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் அதற்கெல்லாம் கலங்காமல் மக்கள் நலன் ஒன்றே நோக்கம் என அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் தன் நலமற்ற சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரபலங்கள் பலரும் பதிவுகள் எழுதி வருவதை காண முடிகிறது.
அந்த வகையில் இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இந்த பாடலில் லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு வாசித்துள்ளார். இந்த பாடலை கொரோனா வைரஸில் இருந்து நம்மை காக்கும் போராளிகளுக்கு சமர்பணம் செய்துள்ளார். இந்த பாடல் ஹிந்தியிலும் வெளியாகியுள்ளது.