இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
வெங்கட்பிரபு அசோக் செல்வன் கூட்டணியின் மன்மதலீலை…. வெளியான சென்ஸார் தகவல்!
ரஹ்மானும் ஆஸ்கரும்
இந்தி பாடல்களை நாம் கேட்டுக்கொண்டிருந்த காலம் போய் வட இந்தியர்களை தமிழ் பாடல்களைக் கேட்கவைத்தவர் ரஹ்மான் என்று சொன்னால் அது மிகையாகாது. தான் இசையமைத்த முதல் படமான ரோஜாவுக்காக தேசிய விருதைப் பெற்று இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்தார். அவர் இசையமைத்த ரோஜா, காதலன், பம்பாய் உள்ளிட்ட படங்களின் பல பாடல்கள் இந்தியா முழுதுவம் வைரல் ஹிட் ஆகின. இதையடுத்து அவர் தமிழ் சினிமாவைப் போலவே பல இந்திப் படங்களுக்கும் இசையமைத்து இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். அவரை உலகப் புகழ் பெற வைத்தது ஸ்லம்டாக் மில்லியனர் எனும் ஹாலிவுட் படம். அந்த படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அந்த மேடையில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என பேசி தமிழர்களைப் பெருமைப்படுத்தினார்.
ரஹ்மான் தயாரித்த 99 சாங்ஸ்
உலகம் முழுவதும் பல மொழிகளில் உருவாகும் படங்களுக்கு இசையமைத்து வரும் ரஹ்மான் 99 சாங்ஸ் என்கிற மியூசிக்கல் திரைப்படத்துக்கு கதை எழுதி, தயாரித்து இசையமைத்தார். இந்த படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
ரஹ்மானின் குடும்பம்
ரஹ்மான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். அமீன் சினிமாவில் சில பாடல்களைப் பாடியுள்ளார். சமூகவலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரஹ்மான், இப்போது தன்னுடைய மனைவியோடு இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தோடு கேப்ஷனாக ‘சேர்ந்து வாழ்தலின் கலை’ எனக் குறிப்பிட்டுள்ளார். ரஹ்மானின் புகைப்படமும் கமெண்ட்டும் இணையத்தில் கவனத்தை பெற்று வருகின்றன.
ரஹ்மானின் அடுத்தடுத்த படங்கள்
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்திய மற்றும் தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து அவர் இசையில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ பார்த்திபன் இயக்குன் இரவின் நிழல், மாரி செல்வராஜ இயக்கும் மாமன்னன் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
BOX OFFICE: பிரபாஸ் நடித்த "ராதே ஷ்யாம்" படத்தின் முதல் நாள் உலகளாவிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?