தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.
குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, அயலான் ஆகிய முக்கிய படங்களில் பணியாற்றுகிறார்.
இதில் இயக்குனர் மாரிசெல்வராஜின் மாமன்னன் படமும் குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சமீப காலமாக துபாயில் தங்கி இருந்து தனது இசைப்பணிகளை கவனித்து வருகிறார்.
'Dubai Expo 2020' யில் இசை நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நடத்தி இருந்தார் ரஹ்மான். அந்த சமயத்தில், அல்லா ரக்கா ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு விசிட் அடித்திருந்தார் இளையராஜா.
ரஹ்மான் மற்றும் இளையராஜா இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிக லைக்குகளை அள்ளி இருந்தது. இதன் பிறகு, தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்த போதும், ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி, இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் ரஹ்மான், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த, பாரதி தாசனின் "இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" எனும் வரிகள் பதித்த ழகரம் ஏந்திய தமிழணங்கு எனும் ஒரு ஓவியத்தை பகிர்ந்துள்ளார்.