www.garudavega.com
iTechUS

APARNA BALAMURALI : நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய ரசிகர்.. மேடையில் மன்னிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

A fan misbehaved with Aparna Balamurali Thankam

Also Read | ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்.. திரண்டு வந்த ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகம்.. வைரல் PHOTOS!

நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்த நடிகை அபர்ணா பாலமுரளி, தற்போது மலையாளத்தில் தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வரும் இவர, அண்மையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில்  இப்பட விழாக்களில் கலந்துகொண்டார்.

அவ்வகையில் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் இப்படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் இப்படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் இணைந்து நடிகை அபர்ணா பாலமுரளி பங்கேற்றார்.  இந்த விழா தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரசிகர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து வழங்க, அவர் அதை ஏற்றார். பின்னர் மகிழ்ச்சியுடன் அவர் அபர்ணாவுடன் கைகுலுக்கி கொண்டார்.

A fan misbehaved with Aparna Balamurali Thankam

அபர்ணாவும் அந்த இளைஞருக்காக எழுந்து மரியாதையாக கைகொடுக்க, அப்போது அந்த மாணவர் அபர்ணாவின் தோள் மீது கையைப் போட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க முயற்சிக்க, அப்போது சுதாரித்து கொண்ட அபர்ணா, சிரித்தபடியே, அம்மாணவரது கையிலிருந்து நழுவினார். அந்த சமயத்தில் அருகில் இருந்த தயாரிப்பாளர், ஹீரோ வினித் உள்ளிட்டோர் அதிருப்தி ஆகியதுடன், அந்த இளைஞரை கட்டுப்படுத்தினர்.

A fan misbehaved with Aparna Balamurali Thankam

அதன் பின்னர் மைக்கில் பேசிய அந்த இளைஞர், “நான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை . நான் நடிகை அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். ” என குறிப்பிட்டு மேடையிலேயே எதிர்ப்பு கிளம்பியதால், அனைவர் முன்னிலையிலும் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய அதே சமயம்,  கோபப்படாமல், சிரித்தபடி மெச்சூரிட்டியுடன் இந்த விசயத்தை கையாண்டுள்ளதாகவும் நடிகை அபர்ணா பாலமுரளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | Thalapathy 67 : விஜய் & மிஷ்கின் இணையும் தளபதி 67 பட ஷூட்..! எங்க ? எப்போ ? தெறி அப்டேட்..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

A fan misbehaved with Aparna Balamurali Thankam

People looking for online information on Aparna Balamurali, Thankam will find this news story useful.